3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம்



கணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை.
 
இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல
உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன.
அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது.
KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது மிகச்சிறிய அளவில் மென்பொருள் பொதிகளையும் கொண்டுள்ளது. Games, Tables Editor, Compiler,Text Editor, Demos, Web Browser போன்ற மென்பொருட்கள் உள்ளடங்கலாக இந்த இயங்குதளமானது உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பான மிகச்சிறிய மென்பொருளாகும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS